செய்திகள்
கோப்பு படம்

அமெரிக்கா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 8 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுதலை

Published On 2020-07-11 10:28 GMT   |   Update On 2020-07-11 10:28 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிறைச்சாலைகளில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக 8 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நியூயார்க்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 32 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. குறிப்பாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 35 சிறைச்சாலைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 400 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறைகளில் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக 10 ஆயிரம் கைதிகளை தண்டனை காலம் முடிவடையும் முன்னே விடுதலை செய்ய கலிபோர்னியா சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான தண்டனை காலம் உள்ள கைதிகள் இந்த நடைமுறையின் கீழ் விடுதலையாக தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால்
வன்முறை மற்றும் பாலியல் ரீதியிலான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடுதலை நடைமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.    
Tags:    

Similar News