செய்திகள்
அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்

நான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்

Published On 2020-07-02 09:37 GMT   |   Update On 2020-07-02 09:37 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதற்காக, எச்1 பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுளளார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி மற்றும் எச் 4 விசாவை இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

எச் -1 பி விசா வழங்குவதை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே, எச்1பி விசா புதுப்பிக்கப்படாமல் வெளிநாட்டவர்கள், நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் அமெரிக்காவில் பணியாற்றவும், மேற்படிப்பு படிக்கவும் செல்வதற்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் இரண்டு லட்சம் பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு டிசம்பர் வரை விசா கிடைக்காது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால் எச்-1 பி விசா தடையை நீக்குவதாக உறுதி அளித்துள்ளார். அவர் (டிரம்ப்) இந்த ஆண்டின் இறுதி வரை எச் -1 பி விசாக்களை ரத்து செய்தார், அது எனது நிர்வாகத்தில் இருக்காது என்றும் ஜோ பிடன் கூறினார்.

என்.பி.சி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்த ஆசிய-அமெரிக்க மற்றும் பசிபிக் தீவு பிரச்சினைகள் குறித்த கூட்டத்தில் பேசும்போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும், எச் -1 பி விசா வைத்திருப்பவர்களின் பங்களிப்பை வெகுவாக பாராட்டிய அவர், கம்பெனி விசாவில் வந்தவர்கள்தான் இந்த நாட்டைக் கட்டமைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News