செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி

Published On 2020-07-02 06:00 GMT   |   Update On 2020-07-02 06:00 GMT
மியான்மரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
நேபிடா:

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம்.
Tags:    

Similar News