செய்திகள்
கோப்பு படம்

மாலி: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலி

Published On 2020-06-15 23:17 GMT   |   Update On 2020-06-15 23:17 GMT
மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 2012-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல்கள் நடந்துவருகிறது. 

அந்நாட்டின் வடக்கு பகுதியில் பெரும்பாலான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த கிளர்ச்சியாளர்கள் குழு பொதுமக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள புவ்ஹா வாரி மாகாணத்தில் நேற்று ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்களை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலின்போது ராணுவ வீரர்களின் ஆயுதங்களையும், வாகனங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி சென்றனர்.     

Tags:    

Similar News