செய்திகள்
மினியாபோலிஸ் போலீசார்

ஜார்ஜ் பிளாய்டு கொலை- மினியாபோலிஸ் நகர காவல்துறையை கலைக்க முடிவு

Published On 2020-06-08 05:46 GMT   |   Update On 2020-06-08 05:46 GMT
கருப்பினர் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டி உள்ள நிலையில், மினியாபோலிஸ் காவல்துறை கலைக்கப்பட உள்ளது.
மினியாபோலிஸ்:

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் கருப்பின மக்கள்  தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர்.

பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம், நாடு முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கும் வகையில், மினியாபோலிஸ் காவல்துறை கலைக்கப்பட்டு மீண்டும் கட்டமைக்கப்படும் என நகர கவுன்சிலர்கள் தெரிவித்தனர். சமூக பாதுகாப்பின் புதிய மாதிரியை உருவாக்க உள்ளதாக கவுன்சில் தலைவர் லிசா பெண்டர் தெரிவித்தார்.

ஜார்ஜ் பியாய்டு இறப்புக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News