செய்திகள்
கொரோனா வைரஸ்

வைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு பதில்

Published On 2020-06-02 10:36 GMT   |   Update On 2020-06-02 10:36 GMT
கொரோனா வைரஸ் இன்னும் உயிர்கொல்லி வைரசாகவே இருக்கிறது என உலக சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த சான்ரபேல் மருத்துவமனையின் தலைவர் ஜாங்க் ரிலோ கூறும்போது, ‘‘கொரோனா தொற்று பலவீனம் அடைந்து வருகிறது என்றும் கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இத்தாலியில் இனி இல்லை’’ என்றும் தெரிவித்தார். அதேபோல் மற்றொரு டாக்டரும் கொரோனா வைரஸ் பலவீனம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்தாலி டாக்டரின் இந்த கருத்தை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மருத்துவ அவசரகால நடவடிக்கையின் தலைவர் மைக்ரியான் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் இன்னும் உயிர்கொல்லி வைரசாகவே இருக்கிறது. இதனால் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வைரஸ் குறைந்த சக்தி வாய்ந்ததாக மாறாமல் இருக்கலாம். ஒரு சமூகமாக அதன் தீவிர மற்றும் வெளிப்பாட்டின் எண்ணிக்கை நாம் வெற்றிகரமாக குறைத்து இருக்கலாம். பார்ப்பதற்கு வைரஸ் பலவீனமாக தோற்றலாம். ஏனென்றால் நாம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கு வைரஸ் பலவீனம் அடைந்து வருவதாக அர்த்தம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News