செய்திகள்
டிரம்ப்

பிரேசிலில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - வெள்ளை மாளிகை அதிரடி

Published On 2020-05-26 06:39 GMT   |   Update On 2020-05-26 06:39 GMT
பிரேசில் நாட்டில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு வெள்ளை மாளிகை அதிரடியாக தடை விதித்துள்ளது.
வாஷிங்டன்:

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் ஆளானோர் பட்டியலில் பிரேசில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், 22 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது.

இந்த நிலையில் பிரேசில் நாட்டில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு வெள்ளை மாளிகை அதிரடியாக தடை விதித்துள்ளது.

இதையொட்டி வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், “வெளிநாட்டினரின் நுழைவை தடுத்து நிறுத்துவதின் மூலம் நமது நாட்டைப் பாதுகாக்க ஜனாதிபதி தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி பிரேசிலில் சமீபத்தில் 14 நாட்கள் இருந்த வெளிநாட்டினர் அமெரிக்கா வர பயண தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில் இருந்த வெளிநாட்டினர், அமெரிக்காவில் கூடுதல் தொற்றுக்கான ஆதாரமாக மாறாமல் இருக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Tags:    

Similar News