செய்திகள்
கைது

அமெரிக்காவில் இந்திய வாலிபரை கொன்றவர் 7 ஆண்டுகளுக்கு பின் கைது

Published On 2020-05-14 14:57 GMT   |   Update On 2020-05-14 14:57 GMT
அமெரிக்காவில் இந்திய வாலிபர் குமன் சிங் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின் அவரை கொலை செய்த நபரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்த இந்தியர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). இவரது பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும். இவர் சவுத் லேக் தஹோ நகரில் உள்ள ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி மன்பிரீத் குமன் சிங் பணியில் இருந்தபோது, கியாஸ் நிலையத்துக்கு வந்த முக மூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மன்பிரீத் குமன் சிங்கை துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மன்பிரீத் குமன் சிங்கின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் இந்த கொலை வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில் மன்பிரீத் குமன் சிங் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின் அவரை கொலை செய்த நபரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த சீன் டோனோஹோ (வயது 34) என்பவர் மன்பிரீத் குமன் சிங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News