செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை - கோப்புப்படம்

இலங்கை கடற்படை முகாமில் மேலும் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-26 08:41 GMT   |   Update On 2020-04-26 08:41 GMT
இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்த முகாம் மூடப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து விடுப்பு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பணி காரணமாக மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்து வீரர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 2 நாட்களில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News