செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் 4 கோடி பேர் பாதிப்பு - உலக வங்கி அறிக்கை

Published On 2020-04-24 05:07 GMT   |   Update On 2020-04-24 05:07 GMT
இந்தியாவில் ஊரடங்கு காரணமாக 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரசால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு, வேலை இழப்பு, சமூக இடைவெளி ஆகியவை காரணமாக, இந்தியாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கோடிக்கணக்கான உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது.எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளே, கொரோனா பரவலுக்கும் காரணமாக அமைந்து விட்டது.

குறிப்பாக, இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, ஓரிரண்டு நாட்களில், சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தொழிலாளர்கள், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களில் இருந்து அவர்களை பாதுகாக்க சுகாதார பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். வங்கிக்கணக்கில் பணம் போடலாம். இதர சமூக திட்டங்களை பயன்படுத்தி உதவலாம்.

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், விமான சேவையை நிறுத்துவதற்கு முன்பு வளைகுடா நாடுகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர். பயண தடை விதிக்கப்பட்ட பிறகு, சீனா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா தனது நாட்டினரை அழைத்து வந்தது.

வெளிநாடுகளில் இன்னும் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், வேலை இல்லாமலும், தங்குமிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் கொரோனா அபாயத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News