செய்திகள்
வான் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி.

லிபியாவில் வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் பலி

Published On 2020-04-04 07:17 GMT   |   Update On 2020-04-04 07:17 GMT
லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.
திரிபோலி:

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவ தளபதி கலீபா ஹப்தார் தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இருதரப்பும் மோதலை நிறுத்திவிட்டு வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் கிளர்ச்சி ராணுவம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசு படையும் தக்கபதிலடி கொடுக்கிறது. இந்த நிலையில் தலைநகர் திரிபோலி அருகே மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து லிபியா விமானப்படை விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின.

இதில் கிளர்ச்சி ராணுவவீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த 3 ஆயுதக்கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

Tags:    

Similar News