செய்திகள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

உதவியாளருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Published On 2020-03-30 14:38 GMT   |   Update On 2020-03-30 14:38 GMT
உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார்.
கொரோனா வைரஸ் உலகளவில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும் திணறி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் சரியான வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் கொரோனா வைரஸ் இறுதி நிலையை எட்டு ஆட்டிப்படைகிறது.

இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 737 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 35 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News