செய்திகள்
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அரசு முடிவு

Published On 2020-03-15 04:29 GMT   |   Update On 2020-03-15 06:05 GMT
ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிட்னி:

சீனாவில் தோன்றி மிகக்கொடிய உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்த நோய்த்தொற்றினால் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.



ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயினால் தாக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை 14 நாட்கள் (தன்னிச்சையாக) தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் பிறப்பித்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், ‘நமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News