செய்திகள்
அதிபர் டிரம்ப்-அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி

கை கொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப்... உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி

Published On 2020-02-05 10:55 GMT   |   Update On 2020-02-05 10:55 GMT
அமெரிக்கா பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, டிரம்ப் உரையின் நகலை கிழித்த சம்பவம் சரச்சையை எழுப்பியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாவது முறையாக உரையாற்றினார்.

வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார். டிரம்ப் உரையின் போது  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். உரையை தொடங்குவதற்கு முன் டிரம்ப், நான்சி பெலோசியிடம் கைகுலுக்க மறுத்தார்.

டிரம்ப் உரையாற்றி முடித்ததும், தனது மேஜையில் இருந்த டிரம்ப் பேச்சின் நகலை நான்சி பெலோசி கிழித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு கட்சியினர் நான்சியின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Tags:    

Similar News