செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் சரண்

Published On 2020-02-04 08:13 GMT   |   Update On 2020-02-04 08:13 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசுப்படையினரிடம் சரண் அடைந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் ஹார், பேட்ஹிஸ், ஹிரேட் மாகாணங்களை சேர்ந்த 59 தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசுப்படையினரிடம் சரண் அடைந்தனர்.  

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பயந்து கடந்த ஜனவரி மாதம் முதல் 500-க்கும் அதிகமான தலிபான், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News