செய்திகள்
பாகிஸ்தானில் பனிப்பொழிவு

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு

Published On 2020-01-15 15:33 GMT   |   Update On 2020-01-15 15:33 GMT
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. 

பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பலுசிஸ்தானில் பனிப்பொழிவு, கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்குள்ள 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பனிப்பொழிவால் வீடுகள் மேற்பரப்பில் அதிகளவில் பனி இருந்ததால் பாரம் தாங்காமல் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் 73 பேரும், பலுசிஸ்தானின் 31 பேரும். பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் 7 பேர் என மொத்தம் 111 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News