செய்திகள்
போப் பிரான்சிஸ் மற்றும் ஜப்பான் மன்னர்

ஜப்பான் மன்னருடன் போப் பிரான்சிஸ் சந்திப்பு

Published On 2019-11-25 12:26 GMT   |   Update On 2019-11-25 12:26 GMT
ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அந்நாட்டு மன்னர் நருஹிட்டோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டோக்கியோ:

உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் தாய்லாந்து மற்றும் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

தாய்லாந்து பயணத்தை முடித்த போப் பிரான்சிஸ் ஜப்பான் சென்றார். அங்கு இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஹிரோஷிமா நாகசாகி மக்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய போப் அணு ஆயுதங்களை கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  

இந்நிலையில், போப் பிரான்சிஸ் ஜப்பான் மன்னர் நருஹிட்டோவை இன்று இம்பீரியல் அரண்மனையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். 

ஜப்பான் மன்னர் நருஹிட்டோவின் தாய், அரசி மிச்சிகோ கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News