செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் நல்லுறவை வளர்ப்போம் - கோத்தபய ராஜபக்சே

Published On 2019-10-25 21:45 GMT   |   Update On 2019-10-25 21:45 GMT
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் நல்லுறவை வளர்ப்போம் என முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:

இலங்கை அதிபர் தேர்தல், அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது. ஆளுங்கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக, இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இலங்கை பொதுஜன பெரமுனாவின் தேர்தல் அறிக்கை நேற்று கொழும்பு நகரில் வெளியிடப்பட்டது.

அதில், “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியா உள்பட ‘சார்க்’ நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க பாடுபடுவோம். எங்கள் வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சமாக இது இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “நல்லுறவு, வர்த்தகம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில், எந்த வெளிநாட்டிடமும் கெஞ்ச மாட்டோம். தேசத்தின் கவுரவத்தை காப்பாற்ற, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, சம அந்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News