செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கம்

Published On 2019-09-09 05:19 GMT   |   Update On 2019-09-09 05:19 GMT
மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத்:

காஷ்மீரில் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தொடர்ந்து இந்திய அரசு மீது குற்றம்சாட்டும் பாகிஸ்தான், தனது நாட்டில் எந்த சலனமும் இன்றி இணையதள சேவையை துண்டித்துள்ளது.  

மொகரம் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மொபைல் சேவை துண்டிக்கப்படுவதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மொகரம் பண்டிகையையொட்டி நடைபெறும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News