செய்திகள்
மாநாட்டில் உரையாற்றிய மாலத்தீவு முன்னாள் அதிபர்

மாலத்தீவில் பலமாக காலூன்ற அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீவிர முயற்சி

Published On 2019-09-04 11:43 GMT   |   Update On 2019-09-04 11:43 GMT
மாலத்தீவில் முக்கியமான அரசுப் பணிகளை கைப்பற்றி பலமாக காலூன்ற அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மாலே:

மாலத்தீவில் முக்கியமான அரசுப் பணிகளை கைப்பற்றி பலமாக காலூன்ற அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அரபி பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் நான்காவது உச்சி மாநாடு மாலத்தீவு நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.



இந்த மாநாட்டில் இன்று உரையாற்றிய மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், ‘நமது நாட்டில் முக்கியமான அரசுப் பணிகளை கைப்பற்றி பலமாக காலூன்றுவதற்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகள், காவல்துறை, ராணுவம், குடியுரிமைத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் முக்கிய பதவிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டு அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இந்த சவாலை மாலத்தீவு அரசு முறியடித்து வெற்றிபெறும் என்ற நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News