search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.எஸ். பயங்கரவாதிகள்"

    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானார்கள். #ISleaderskilledinIraq
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
     
    இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சிலரை சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 7 தலைவர்கள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #ISleaderskilledinIraq
    சிரியாவின் சுவைடா மாகாணத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 19 வயது மாணவனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவைடா மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளுக்குள் கடந்த மாதம் 25-ம் தேதி நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

    பெரும்பாலும் பெண்கள் உள்பட 30-க்கும் அதிகமானவர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிடிபட்ட பெண்களை உயிருடன் எரித்துக்கொல்லப் போவதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

    பிணைக்கைதிகளை விடுவிக்க அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் முஹன்னட் தவுக்கான் அபு அம்மர் என்னும் 19 வயது மாணவனை கொன்றுவிட்ட பயங்கரவாதிகள் அவரது பிரேதத்தின் படங்களை தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். #tamilnews
    சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். #ISsuicideAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் நேற்று பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வேடியா நகரில் தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் தொடர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் இதேபோல் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சுமார் 127 பொதுமக்கள் உள்பட 221 பேர் பரிதாபமாதாக பலியாகினர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ISsuicideAttack
    சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். #Iraqbombing #IslamicStatemeeting #45killedinSyria
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்துள்ளது. ஆனால், அங்கிருந்து அண்டை நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் அண்டை நாடான ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின்மீது ஈராக் நாட்டு போர் விமானங்கள் நேற்றிரவு ஆவேச தாக்குதல்களை நடத்தின.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்துறை மந்திரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உள்பட 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Iraqbombing #IslamicStatemeeting #45killedinSyria
    இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #IndonesiaChurchAttack

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 7:30 மணியளவில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்பட்டது. 



    இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய ஆறு பயங்கரவாதிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  #IndonesiaChurchAttack
    ×