என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரபாபு நாயுடு மீது ரோஜா பாய்ச்சல் 19 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டார்"

    • திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் 19-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதை முதன்மை நோக்கமாக கொள்ள வேண்டும்

    திருச்சி:

    விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அர்ஷியா பேகம் தலைமை வகித்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 138 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அப்போது நாராயண பாபு பேசியது :

    மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்களாக பட்டம் பெறும் அனைவரும் ஏழை, எளிய மக்களுக்கு குறிபபாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதை முதன்மை நோக்கமாக கொள்ள வேண்டும். வருங்காலத்தில் முதுநிலை மருத்துவப் பட்டம் பயின்று மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும் என்றார்.

    விழாவில் டாக்டர்கள் எம்.எஸ்.அஷ்ரப், ஜமீர்பாஷா, பார்த்திபன், புருஷோத்தமன், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    அரசு செயல்பாடு திருப்தி இல்லை என்று பதிவு செய்த 19 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து சந்திரபாபு நாயுடு நீக்கி உள்ளார் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். #ChandrababuNaidu

    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசு செயல்பாடு குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் கருத்து அறிந்து வருவதாக கூறுகிறார்.

    அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்து உள்ளதா என்று கேள்வி கேட்டு, நலத்திட்டங்கள் கிடைத்தது என்றால் எண் ஒன்றை அழுத்த கூறுகின்றனர். இதேபோல் அரசின் செயல்பாடு திருப்தி இல்லை என்றால் எண் இரண்டை அழுத்த கூறுகின்றனர்.

    மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று செல்போனில் கருத்து கேட்டு வருவதாக கூறுவது ஏமாற்று வேலை. அரசு செயல்பாடு திருப்தி இல்லை என்று பதிவு செய்த 19 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து சந்திரபாபு நாயுடு நீக்கி உள்ளார்.


    தன் அரசுக்கு எதிரானவர்களை கண்டறிந்து நீக்குவதற்காகத்தான் செல் போனில் கருத்து கேட்டு சதி செயலில் ஈடுபடுகிறார்கள். நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

    எனது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய நிதி அளிப்பதில்லை. அரசு பெண்கள் பள்ளியில் போதுமான கழிவறை இல்லை. எதிர்க்கட்சி என்பதால் எனது தொகுதியை புறக்கணித்து வருகிறார்கள். இருந்தாலும் எனது சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu

    சிரியாவின் சுவைடா மாகாணத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 19 வயது மாணவனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவைடா மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளுக்குள் கடந்த மாதம் 25-ம் தேதி நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

    பெரும்பாலும் பெண்கள் உள்பட 30-க்கும் அதிகமானவர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிடிபட்ட பெண்களை உயிருடன் எரித்துக்கொல்லப் போவதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

    பிணைக்கைதிகளை விடுவிக்க அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் முஹன்னட் தவுக்கான் அபு அம்மர் என்னும் 19 வயது மாணவனை கொன்றுவிட்ட பயங்கரவாதிகள் அவரது பிரேதத்தின் படங்களை தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். #tamilnews
    ×