செய்திகள்
எமி சாட்டர்வைட் லீ தகுகு

நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்

Published On 2019-08-20 11:45 GMT   |   Update On 2019-08-20 11:45 GMT
நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார். ஜனவரியில் குழந்தையை எதிர்பார்க்கிறோம் என நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் எமி சாட்டர்வைட் (வயது 32). சிறந்த ஆல்-ரவுண்டரான இவர் நியூசிலாந்து அணிக்காக 119 ஒருநாள் போட்டிகளிலும், 99 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை லீ தகுகு (வயது 28).  இவர் 66 ஒருநாள் போட்டியிலும், 50 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தினர். பின்னர் அன்பு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 2014-ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள். 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது லீ தகுகு கர்ப்பமாக உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என மகிழ்ச்சியாக டுவிட்டர் பக்கத்தில் எமி சாட்டர்வைட் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.



எமி சாட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எங்களது முதல் குழந்தையை வரும் ஜனவரி மாதம் எதிர்பார்க்கிறோம். இந்த செய்தியை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். புது வாழ்க்கை குறித்து நாங்கள் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு தகுகு ‘‘நாங்கள் மூன்று பேர்’’ என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்து கொள்ளலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News