செய்திகள்
ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தம்பி போட்டி

Published On 2019-08-10 07:30 GMT   |   Update On 2019-08-10 07:30 GMT
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஜபக்சே தம்பி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2 தடவை அதிபர் பதவி வகித்தவர். தேர்தலில் போட்டியிட தடை விதித்து அரசியல் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

எனவே, அவர் தனது தம்பி கோத்தபய ராஜபக்சேவை தேர்தலில் நிறுத்துகிறார். இவர் மகிந்த ராஜபக்சே அரசியல் 10 ஆண்டுகளாக ராணுவ மந்திரியாக இருந்தார். இலங்கையில் 33 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.

தேர்தலில் இவர் ராஜ பக்சேவால் புதிதாக தொடங்கப்பட்ட இலங்கை பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் மீது இலங்கை மற்றும் அமெரிக்காவில் ஊழல், கொலை வழக்குகள் உள்ளன. இருந்தாலும் வர இருக்கின்ற அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News