செய்திகள்
தாக்குதல் நடந்த பகுதி

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 42 பேர் பலி

Published On 2019-08-05 16:05 GMT   |   Update On 2019-08-05 16:05 GMT
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வெளி தாக்குதல் பொதுமக்கள் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
திரிபோலி:

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கு எதிராக கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.

இரு தரப்பினரும் வான் வழித்தாக்குதல் துப்பாக்கி சண்டை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியை கைப்பற்ற கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படையினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இந்த சண்டையில் பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 



இந்நிலையில், அந்நாட்டின் தென்மேற்குகில் உள்ள முர்ஸுக் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் விமான தாக்குதல் நடத்தினர். இந்த வான்வெளி தாக்குதலில் 42 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்கள் அப்பகுதியில் நடைபெற்ற திருமணவிழா ஒன்றில் பங்கேற்றிருந்த போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News