செய்திகள்
ஹயா பிண்ட் அல் ஹுசைன்

கட்டாய திருமணம்: துபாய் இளவரசி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு

Published On 2019-08-03 04:36 GMT   |   Update On 2019-08-03 04:36 GMT
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மனைவி ஹயா லண்டன் நீதிமன்றத்தில் கட்டாய திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
துபாய்:

துபாயை ஆட்சி புரிபவர் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (69). இவரது மனைவி ஹயா பிண்ட் அல் ஹுசைன். இருவருக்கும் சையத்(7), ஜலீலா(11) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னரிடம் இருந்து ஹயா விவாகரத்து கோரியுள்ளார். அதன் பின்னர் மன்னரை விட்டு பிரிந்து கடந்த மே மாதம் தனது குழந்தைகளுடன் தலைமறைவானார்.

ஹயா, ஜெர்மனிக்குச் சென்றதாகவும், அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹயா, லண்டனில் தலைமறைவாகி இருப்பதாகவும், அங்கு தஞ்சம் கேட்டுள்ளதாகவும் செய்தி பரவியது.

மனைவி பிரிந்த விரக்தியில், துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், கவிதைகளை எழுதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,  மன்னரின் மனைவியான ஹயா பிண்ட் அல் ஹூசைன், அவரது குழந்தைகளில் ஒருவருக்கு கட்டாய திருமணம் நடத்தப்பட உள்ளதாகவும், பாதுகாப்பு கேட்டும் லண்டன் நீதிமன்றத்தில் ஹயா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான பகுதியளவு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு நீதிபதி அனுமதியளித்தார். அப்போது தனது குழந்தைகளை துபாய்க்கே திருப்பி அனுப்புமாறு ஷேக் முகமது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. 
Tags:    

Similar News