செய்திகள்
ஆபத்தான சுரங்கம் (கோப்பு படம்)

மியான்மர்: நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

Published On 2019-07-28 09:27 GMT   |   Update On 2019-07-28 09:27 GMT
மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்தனர்.
யாங்கூன்:

மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்தனர்.

மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கனிமங்கள் ஏராளமாக பூமிக்குள் புதைந்துள்ளன.



இவற்றை வெட்டி எடுக்கும் பணியில் பல்வேறு வகையான சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. அவ்வகையில், அந்நாட்டின் கச்சின் மாநிலத்துக்குட்பட்ட பாகன்ட் பகுதியில் உள்ள பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் ஒரு சுரங்கத்துக்குள் இன்று அதிகாலை தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சுரங்கத்தின் ஒருபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அந்த சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து சுமார் 700 அடி ஆழத்தில் உள்ளே உறங்கியவர்களின் மீது விழுந்து மூடியது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை காயங்களுடன் மீட்டனர். மேலும், உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News