செய்திகள்
பாட்டிலில் வந்த கடிதத்துடன் எலியட்

50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு

Published On 2019-07-22 03:15 GMT   |   Update On 2019-07-22 03:39 GMT
ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இது குறித்த சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம்.
சிட்னி:

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட்(9) ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்துக் கிடந்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் எடுக்கச் சென்றான்.

அருகே சென்று எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது கடிதம் என்று. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதன் மேற்பகுதியில் நவம்பர் மாதம் 17ம் தேதி, 1969ம் ஆண்டு என இருந்தது.



கடிதத்தை மேலும் படித்தபோது அந்த கடிதம், 'இங்கிலாந்தில் இருந்து மெல்போர்னுக்கு குடிபெயர்கிறேன். கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன். யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ, அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள்' எனும் செய்தியை தாங்கி வந்திருந்தது.

இதனையடுத்து அந்த கடிதத்தை எழுதிய கில்மோரோவுக்கு, எலியட் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளான். இந்த கடிதத்தை கில்மோரோ எழுதும்போது அவருக்கு 13 வயதே ஆனது. இப்போது அவருக்கு 63 வயதாகிவிட்டது. இவர் மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News