செய்திகள்
இம்ரான் கான்

குல்பூஷனை விடுதலை செய்யும்படி சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை- இம்ரான் கான்

Published On 2019-07-18 04:55 GMT   |   Update On 2019-07-18 04:55 GMT
குல்பூஷனை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்:

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தீர்ப்பை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

அத்துடன், இந்தியா சார்பில் குல்பூஷன் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம், உறவினர்களை  பார்க்கலாம் எனவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை இந்தியா வரவேற்றுள்ளது.



இந்நிலையில், தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “குல்பூஷ்ன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். குல்பூஷனை விடுதலை செய்ய வேண்டும் என்றோ, இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றோ சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை. 

எனவே இந்த தீர்ப்பின்படி குல்பூஷனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தேவையில்லை. பாகிஸ்தான் அரசு, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்” என கூறியுள்ளார்.
Tags:    

Similar News