செய்திகள்
கோப்புப்டம்

தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய வாலிபர் கைது

Published On 2019-07-17 16:29 GMT   |   Update On 2019-07-17 16:29 GMT
பல்கேரியா நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்கேரியா:

ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பல்கேரியா. அந்நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் கணினி தகவலை ஹேக் செய்து தகவலை திருடியதாக 20 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்கேரியாவின் ஷோபியா நகரில் செயல்பட்டுவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக இருந்த 20 வயது வாலிபர் ஒருவர் நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடிய குற்றத்திற்காக அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.

தேசிய வருவாய் அமைப்பில், நாட்டின் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News