செய்திகள்
கலிபோர்னியாவில் நிலநடுக்கத்தால் சாலையில் ஏற்பட்ட விரிசல்

கலிபோர்னியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published On 2019-07-05 10:26 GMT   |   Update On 2019-07-05 10:26 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தில் நவேடாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

அமெரிக்காவின் சுதந்திர தினமான நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அனைவரும் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அனைவரும் வீட்டை விட்டு அலறிக் கொண்டு வெளியே வந்தனர்.

இந்த நிலநடுக்கம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கே 240 கிமீ தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ரிட்ஜ்கெர்ஸ் எனும் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது.



கலிபோர்னியாவில் உள்ள நவேடாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதுபோன்ற நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவில் ஏற்படவில்லை என அமெரிக்கா புவியியல் துறை கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ரிட்ஜ்கெர்ஸ் பகுதியில் உள்ள இரு வீடுகள் திடீரென தீப்பிடித்தன. மேலும் பல்வேறு கடைகள், நிறுவனங்கள், பெரிய கடைகளில் இருந்த வியாபாரப் பொருட்கள் என அனைத்தும் கீழே விழுந்தன.

வீடுகளுக்கு வழங்க நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு குழாய்களிலும் பயங்கரமான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் தற்போது அரசு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த அதிர்வுகள், ரிக்டர் அளவுகளில் 4.5 ஆக இருந்தது என புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
Tags:    

Similar News