செய்திகள்

வங்காளதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பலி

Published On 2019-06-24 05:00 GMT   |   Update On 2019-06-24 05:00 GMT
வங்காளதேசம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மவுல்விபஜார் பகுதியை நெருங்கிய ரெயில் குலாவ்ரா என்ற இடத்தில் உள்ள போரோம்சால் பாலத்தை கடந்து கொண்டிருந்தது.



அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டு கீழே விழுந்தன. அவற்றில் இரு பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த சுமார் 100 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Tags:    

Similar News