செய்திகள்

இந்த சிறிய பூச்சி கடித்ததால் சுய நினைவை இழந்த 2 வயது குழந்தை -அதிர்ச்சி தகவல்

Published On 2019-06-05 05:43 GMT   |   Update On 2019-06-05 05:43 GMT
அமெரிக்காவில் ஒரு சிறிய பூச்சி கடித்ததால் 2 வயது குழந்தை தனது சுய நினைவை இழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்தவர் கெய்லா ஆப்லஸ். இவரது 2 வயது மகன் ஜாக்சன் ஆப்லஸ். குழந்தைக்கு கடந்த வாரம் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருந்துகள், மாத்திரைகள் கொடுத்தும் பயனில்லை.

இதையடுத்து குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கெய்லா, பதறிபோய் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த 2 வயது குழந்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் சோதனை செய்யவே, அந்த குழந்தை சுய நினைவை இழந்ததாக தெரிவித்தனர். பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக பிழைத்துள்ளது.



இது குறித்து குழந்தையின் தாய் கெய்லா கூறுகையில், 'வீட்டில் ஜாக்சன் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோட்டத்தில் இருந்த உண்ணி எனப்படும் சிலந்தி வடிவிலான பூச்சி கடித்தது. உடனே சிறிது நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டது.

பின்னர் உடல் முழுவதும் சிவப்பு நிற புள்ளிகள் வரவே பயந்துபோய் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றேன். இப்போது என் குழந்தை தேறி வருகிறது' என கூறினார்.






Tags:    

Similar News