செய்திகள்

ஓரியோ பிஸ்கெட்டில் கிரீமிற்கு பதில் டூத்பேஸ்ட் வைத்த யூடியூப் ஸ்டாருக்கு 15 மாதம் சிறை -ஏன்?

Published On 2019-06-03 10:27 GMT   |   Update On 2019-06-03 10:27 GMT
ஓரியோ பிஸ்கெட்டில் உள்ள கிரீமிற்கு பதிலாக டூத்பேஸ்ட்டினை கலந்து முதியவருக்கு கொடுத்த யூடியூப் ஸ்டாருக்கு 15 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் ஸ்டார் கங்குவா ரென். இவரை பல லட்சம் பேர் யூடியூபில் பின்தொடர்கின்றனர். அதிக அளவிலான ரசிகர் பட்டாளமும் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடத்திய பிராங்க் ஷோ ஒன்றில், வசிக்க வீடுகூட  இல்லாமல் தெருவில் அமர்ந்திருந்த 52 வயதுடைய முதியவர் ஒருவருக்கு உணவு அளிப்பதாக கூறி ஓரியோ பிஸ்கெட் பாக்கெட்டினை வழங்கியுள்ளார்.



அந்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு, முதியவரும் நன்றி கூறி சாப்பிட தொடங்கினார். பசியால் பிஸ்கெட்  முழுவதும் தின்றுவிட்டார். இதனை ரென் வீடியோவும் எடுத்துள்ளார்.  சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அப்பகுதி போலீசார், உடனடியாக ரென்னை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நடந்த விவரத்தை கூறவே, கோர்ட்டில் ரென்னுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட முதியவருக்கு 22,300 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம்) தொகையாக அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News