செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 2 வாலிபர்களுக்கு 30 ஆண்டு ஜெயில்

Published On 2019-05-27 11:07 GMT   |   Update On 2019-05-27 11:07 GMT
ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரைச் சேர்ந்தவர் மாக்ஷா அக்மதி. 6 வயது சிறுமியான இவளை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்தனர்.

அவளை விடுவிக்க ரூ.2 கோடி (3 லட்சம் டாலர்) பிணைத் தொகை வழங்கும்படி மிரட்டல் விடுத்தனர். ஆனால் அவளது பெற்றோரால் கேட்ட பிணைத் தொகையை வழங்க முடியவில்லை.

எனவே, அவளை கொலை செய்தனர். அதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமியை கடத்தி கொலை செய்த 2 வாலிபர்களுக்கு தலா 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தண்டனை போதாது. அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இருக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். குற்றவாளிகள் 18 வயதுக்கு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
Tags:    

Similar News