செய்திகள்

கொலம்பியா நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Published On 2019-04-23 06:21 GMT   |   Update On 2019-04-23 06:21 GMT
கொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. #ColambiaLandslide
கராகஸ்:

தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள கவுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று முந்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது 20 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில், இம்மாநிலத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி வருகின்றனர் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ColambiaLandslide 
Tags:    

Similar News