செய்திகள்

இந்தோனேசியா - சுரங்க நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

Published On 2019-03-05 13:58 GMT   |   Update On 2019-03-05 13:58 GMT
இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. #Indonesia #MineCollapse
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், கடந்த மாதம் 26ம் தேதி தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியானதாகவும்,  13 பேரை பத்திரமாக மீட்கப்பட்டதாகவும்  முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்தோனேசியா தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது எனவும் தெரிவித்தனர். #Indonesia #MineCollapse
Tags:    

Similar News