செய்திகள்

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்- தெருக்களில் உலாவந்த முதலைகள்

Published On 2019-02-05 10:23 GMT   |   Update On 2019-02-05 10:23 GMT
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. #AustraliaFlood
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்வதால் குவின்ஸ் லேன்டில் உள்ள அணை திறந்து விடப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய நீர் கைரனஸ், டவுன்ஸ்வில்லே பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவும், மின்சார வெட்டும் நிலவுகிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரிப்பதையடுத்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. #AustraliaFlood
Tags:    

Similar News