செய்திகள்

பாரிசில் கனடா சுற்றுலா பயணி பாலியல் பலாத்கார வழக்கு- காவலர்களுக்கு 7 ஆண்டு சிறை

Published On 2019-02-01 09:31 GMT   |   Update On 2019-02-01 09:31 GMT
பாரிசின் காவல் நிலையத்தில் கனடா பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு காவலர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #canadiantouristcase #prisonersjailed
பாரிஸ்:

பாரிசின் குவாய் தெஸ் ஆர்பீப்ரஸ் பகுதியில் உள்ள காவல் தலைமையகத்தில் கடந்த 2014ம் ஆண்டு கனடா பெண் சுற்றுலா பயணி எமிலி ஸ்பான்டன்(வயது 39), 2 காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாரிஸ் நீதிமன்றத்தில் எமிலி வழக்கு தொடர்ந்தார். பின்னர் 2015ம் ஆண்டு இவ்வழக்கு வேரொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், சுற்றுப்பயணத்திற்காக பாரிஸ் காவல் தலைமையகத்திற்கு சென்றபோது தன்னை காவலர்கள் 2 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக எமிலி ஸ்பான்டன் தெரிவித்தார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் நிக்கோலா ரெடேன் மற்றும் ஆன்டோன் குயின் இருவரும், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். தங்களை நிரபராதி எனவும், எமிலி ஸ்பான்டன், தங்களுடன் உல்லாசமாக இருக்க சம்மதித்தார் எனவும் திட்டவட்டமாக கூறினர்.

அதன்பின்னர் பாதிக்கப்பட்டவரின் அறிக்கைகள், டிஎன்ஏ மாதிரி மற்றும் தொலைபேசி பதிவுகள் போன்ற சான்றுகளின் மூலம் அப்பெண் கற்பழிக்கப்பட்டது நிரூபணம் ஆனது. இதையடுத்து குற்றவாளிகள் இருவருக்கும் 7 ஆண்டகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு பிரான்சில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. #canadiantouristcase #prisonersjailed





Tags:    

Similar News