செய்திகள்

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்

Published On 2018-12-16 19:03 GMT   |   Update On 2018-12-16 19:03 GMT
2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது. #ClimateNegotiator #Paris
கேட்டோவைஸ்:

வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ‘சி.ஓ.பி. 24’ என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில் உள்ள கேட்டோவைஸ் நகரில் நடந்தது.

மிக நீண்ட பேச்சுவார்த்தையில், 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்படி பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படும். இதுபற்றி இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா கூறும்போது, “பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை ஒன்றிணைத்து நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். இது நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. யாரையும் விட்டு விடாமல் இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்த செய்வதற்காக கடுமையாக உழைத்தோம்” என்று குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2020-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் வெளியேறுகிற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கினை உலக நாடுகள் விரைவாக எட்ட வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் விருப்பம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #ClimateNegotiator #Paris
Tags:    

Similar News