செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு - ஓய்வு விடுதியில் இருந்த 7 கல்லூரி மாணவர்கள் பலி

Published On 2018-12-02 14:59 IST   |   Update On 2018-12-02 14:59:00 IST
இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஓய்வு விடுதி மண்ணில் புதைந்தது. விடுதியில் தங்கியிருந்த 7 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். #Indonesialandslide #7killed
ஜகர்தா:

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள்  வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா வந்திருந்தனர்.

இங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் ஒரு விடுதியில் இவர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இன்று அந்த பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்து விரைந்துவந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயங்களுடன் 7 பேரை காப்பாற்றினர். இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 7 மாணவர்கள் பிரேதங்களாக மீட்கப்பட்டனர். #Indonesialandslide #7killed 
Tags:    

Similar News