செய்திகள்

தைவானில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2018-11-25 09:03 GMT   |   Update On 2018-11-25 09:03 GMT
தைவானில் ஓரின சேர்க்கை திருமண சட்ட அந்தஸ்து வழங்க வேண்டுமா? என்பது குறித்த வாக்கெடுப்பில், வழங்க வேண்டாம் என அதிக அளவில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தைபே:

தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதற்கான சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் 2 ஆண்டுகளில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து நேற்று இங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் 10 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கலாமா என்ற கேள்வியும் ஒன்று. தைவானில் உள்ள நகரங்களில் நேற்று அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று வாக்களித்தனர்.



வாக்கெடுப்பு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கக் கூடாது என மெஜாரிட்டி ஆக வாக்களித்து இருந்தனர். அதன்மூலம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு நடந்த பொது வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டது.
Tags:    

Similar News