செய்திகள்

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் - பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் பலி

Published On 2018-10-29 20:45 GMT   |   Update On 2018-10-29 20:45 GMT
காசா எல்லையில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Gaza #Palestinian #IsraeliStrike
காஷா:

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும்.

இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களின் மூதாதையர்களின் இல்லங்களுக்கு திரும்ப உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து, காசா எல்லை பகுதியில் பாலஸ்தீனர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதோடு பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானம் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அதே சமயம் பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேரும், இஸ்ரேல் எல்லை பகுதியில் உள்ள வேலிக்கு அருகே வெடிகுண்டுகளை வைக்க முயன்றதாகவும், அதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.  #Gaza #Palestinian #IsraeliStrike 
Tags:    

Similar News