செய்திகள்

சூடான் விமான நிலையத்தில் இரண்டு ராணுவ விமானங்கள் மோதல்

Published On 2018-10-04 08:55 GMT   |   Update On 2018-10-04 11:30 GMT
சூடான் விமான நிலையத்தில் இரண்டு ராணுவ விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. #SudanAirport #PlanesCollided
கர்த்தூம்:

சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள பிரதான விமான நிலையத்தில் இருந்து ராணுவ போக்குவரத்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் நேற்று இரண்டு ராணுவ போக்குவரத்து விமானங்கள் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

ஒரு விமானம் தரையிறங்கி ரன்வேயில் வேகமாக சென்றபோது, அதன் வால் பகுதியில் மற்றொரு விமானம் மோதியது. இதில் இரண்டு விமானங்களும் கடுமையாக சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 8 பேர் காயமடைந்ததாக உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியானது.

விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது. சர்வதேச விமானங்கள் போர்ட் சூடான் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. #SudanAirport #PlanesCollided
Tags:    

Similar News