செய்திகள்

உலக கல்வி நிறுவனங்கள் தரவரிசை: முதல் 200 பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை

Published On 2018-09-27 22:01 GMT   |   Update On 2018-09-27 22:01 GMT
உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #WorldUniversityRanking #IndianInstitution
வாஷிங்டன்:

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை ‘டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 200 இடங்களில், எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கல்வித்துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 22-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில், இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 251-க்கும், 300-க்கும் இடையிலான இடத்தை பிடித்துள்ளது. முதல் 200 இடங்களுக்குள் எந்த இடத்தையும் பிடிக்காவிட்டாலும், 1,000 வரையிலான பட்டியலில், 49 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட 7 அதிகம் ஆகும். #WorldUniversityRanking #IndianInstitution 
Tags:    

Similar News