செய்திகள்

16 வயதில் கற்பழிக்கப்பட்டேன் - மாடல் அழகி பத்மாலட்சுமி தகவல்

Published On 2018-09-26 05:18 GMT   |   Update On 2018-09-26 05:18 GMT
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மாலட்சுமி நான் 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியுள்ளார். #PadmaLakshmi
நியூயார்க்:

அமெரிக்க வாழ் இந்தியர் பத்மாலட்சுமி (48). சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். மாடல் அழகியான இவர் எழுத்தாளர் மற்றும் நடிகையும் ஆவார். இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இவர் அமெரிக்காவின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன்னைப் பற்றி எழுதியுள்ளார். அதில் “நான் எனது 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். அப்போது 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன்.


அந்த நபரும் என்னுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்ததால் படுக்கையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.

அப்போது அந்த நபர் என்னை கற்பழித்து விட்டார். இத்தகைய நடவடிக்கையில் ஒரு ஆண் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் பெண்ணின் வாழ்க்கை சீரழிகிறது. அவளை யாரும் அன்புடன் நடத்துவதில்லை.

எனக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரட் கவான்னா மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து எனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தும் எழுத முடிவு செய்தேன்” என கூறியுள்ளார். #PadmaLakshmi
Tags:    

Similar News