செய்திகள்

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றது

Published On 2018-09-01 10:47 GMT   |   Update On 2018-09-01 11:56 GMT
வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள 7 நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் அமைப்பின் வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது. #BIMSTEC
கொழும்பு :

வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிம்ஸ்டெக் மாநாடு, இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் நாட்டில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தலைமை வகித்த நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 4-வது பிம்ஸ்டெக் மாநாடு நடந்து முடிந்தது.

இதைதொடர்ந்து, வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது, நேபாள பிரதமர் சர்மா ஓலி முறைப்படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் பிம்ஸ்டெக் அமைப்பில் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். அதன்படி 5-வது பிம்ஸ்டெக் மாநாடு அடுத்த அண்டு இலங்கையில் நடைபெற உள்ளது.

பிம்ஸ்டெக் அமைப்பிற்கு புதிதாக தலைமை ஏற்றுள்ள இலங்கைக்கு இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், மற்றும் தாய்லாந்து நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #BIMSTEC
Tags:    

Similar News