செய்திகள்

தனது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி

Published On 2018-08-20 20:47 GMT   |   Update On 2018-08-20 20:47 GMT
தனது பிரசவத்திற்காக நியூசிலாந்து பெண் மந்திரி ஜூலி அன்னே ஜென்டெர், 1 கி.மீ தூரம் தன்னுடைய மிதிவண்டியை தானே ஓடிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெல்லிங்டன் :

நியூசிலாந்து நாட்டில் இணை போக்குவரத்துத்துறை மந்திரியாக இருப்பவர் ஜூலி அன்னே ஜென்டர் (வயது 38). இவர், முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக, பிரசவகால விடுமுறையில் இருந்தார்.

பிரசவத்திற்கான தேதி வந்தவுடன் மருத்துவமனையில் சேர்வதற்காக தனது வீட்டில் இருந்து ஆக்லாந்து என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்து சுமார் 1 கி. மீ தூரம் தன்னுடைய மிதிவண்டியை தானே ஓடிக்கொண்டு மருத்துவமனைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூலாக ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜென்டரின் மன தைரியத்தை பாராட்டி பல பெண்கள் அவரக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News