செய்திகள்

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 6 பேர் பலி

Published On 2018-08-13 10:12 GMT   |   Update On 2018-08-13 10:12 GMT
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #Pakistancoalmine explosion
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் துரத்திலுள்ள சஞ்சாடி பகுதியில்  இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் அவர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பூமியின் அடியில் இருந்து பெருமளவில் கசிந்த மீத்தேன் வாயுவினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் சிறுபகுதி இடிந்து விழுந்தது.


இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு  பலுசிஸ்தான் மாகாண தற்காலிக முதல் மந்திரி அலாவுதின் மர்ரி இரங்கல் தெரிவித்துள்ளார்.  #Pakistancoalmine explosion  #coalmineexplosion #minerskilled 
Tags:    

Similar News