செய்திகள்

இலங்கை எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பதில் ராஜபக்‌சே அணியினரை அங்கீகரிக்க மறுப்பு

Published On 2018-08-10 09:34 GMT   |   Update On 2018-08-10 09:34 GMT
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக ராஜபக்‌சே அணியினரை அங்கீகரிப்பதற்கான மனுவை பாராளுமன்ற சபாநாயகர் நிராகரித்துள்ளார். #Rajapaksa #MaithripalaSirisena
கொழும்பு :

இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன.

எனினும், இலங்கையில் ஆளும் சுதந்திர கட்சியில் அதிபர் சிறிசேனாவின் தலைமையை, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் விசுவாசிகள் சிலர் ஏற்காமல் எதிர்ப்பு அணியாக செயல்பட்டனர். இதனால், ராஜபக்சே தலைமையில் இலங்கை மக்கள் கட்சி எனும் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களுடன் எதிர்கட்சியாக உள்ள சம்பந்தனின் தமிழ் தேசிய கூட்டமைபிற்கு பதிலாக 70 உறுப்பினர்களை கொண்ட தங்களது கட்சியை பிரதான எதிர்கட்சியாக அங்கீகரிக்க கோரி சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் ராஜபக்சேவின் அணியினர் மனு ஒன்றை அளித்தனர்.



ஆனால், பாராளுமன்ற தேர்தலில் ராஷ்பக்‌ஷே அணியினர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். சிறிசேனா அதிபராக உள்ள நிலையில் அவரது கட்சி சார்பில் வெற்றிபெற்ற ராஜபக்‌சே அணியினரை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை எனக் கூறி கோரிக்கை மனுவை இன்று சபாநாயகர் நிராகரித்துள்ளார். #Rajapaksa #MaithripalaSirisena
Tags:    

Similar News